திருச்சி அருகே லாரியும், ஆம்னி வேனும் (Lorry and omni van) நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், எஸ்பி சுஜித் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து வந்தனர்.
இதேபோன்று, மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது திருச்சி மாவட்டம் நம்பர் 1டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் (Lorry and omni van) நேருக்கு நேர் மோதி விபத்தானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, ஒரு பெண், 4 ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் 6 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இந்த விபத்தினால் திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தது. காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், முதல் கட்ட தகவலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. முருகன் (32), தாவணா ஸ்ரீ (10), ஆனந்தாயி(57), முத்துசாமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் சசிகலா(36), சகுந்தலா(28) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஒட்டுனர் செந்தில்குமார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோட்டம்.
ஆம்னி வேனில் வந்தவர்கள் அனைவரும் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், வடக்குத்தெரு, சின்ன வளையம் உடையார் பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவரின் மகன் செந்தில்குமார் (43), வாத்தலை காவல் நிலையத்தில் உள்ளார்.