பேருந்தில் காதல் ஜோடி செய்த செயலால் பயணிகள் இடையே பரபரப்பு!

lovers-attempt-suicide-on-a-moving-bus
lovers attempt suicide on a moving bus

பேருந்தில் பயணம் செய்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் சென்று கொண்டிருந்தது. சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த பேருந்தில் பயணித்த காதல் ஜோடி ஒன்று விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகபயணிகள் உடனடியாக விஷம் அருந்திய இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்த ராஜேஷ் என்பவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பத்தும் லோகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

lovers-attempt-suicide-on-a-moving-bus
lovers attempt suicide on a moving bus

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் இவர்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியுள்ளனர்.

காதல் ஜோடிகள் ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தது சிறிது நேரம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts