தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன் . இப்படம் கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது .
யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற சூப்பர் டூப்பர் கமெர்சியல் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில், எஸ்.கேவின் நடிப்பில் சிறப்பாக தரமாக உருவாகியுள்ள மாவீரன் படத்தில் எஸ்.கே-வுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் செல்ல மகள் அதிதி நடிக்க சுனில், யோகி பாபு, சரிதா, மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் முதல் நாள் வசூலில் உலகம் முழுவதும் ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் இனி வரும் நாட்களிலும் மாவீரன் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .