அதர்வா மற்றும் கபாலி மணிகண்டன் ஆகியோர் காம்போவில் முதல்முறையாக உருவாகியுள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. இந்த வெப் தொடரில் மறைந்த பிரபல நடிகர் முரளியின் அன்பு மகனான நடிகர் அதர்வா மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
அதேபோல் இந்த பக்கம் வசீகரமான வசங்களை பேசி கிளாஸான வில்லன் கதாபாத்திரத்தில் கபாலி மணிகண்டன் நடித்துள்ளார் . இவர்களுடன் இந்த வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரியாக 30 மணி நேரத்தில் நடக்கும் அதி பயங்கரமான சம்பவங்களை வைத்து இந்த வெப் தொடர் மிகவும் திரில்லிங்காக உருவாக்கப்பட்டுள்ளது .
பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் முதல் பாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
காட்சிக்கு காட்சி பரபரப்பியும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ள இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றது.
பரபரப்பான காட்சிகளை உள்ளடக்கிய இந்த வெப் தொடரின் முதல் பாகத்தில் வெறும் 5 எபிசோடுகள் மட்டுமே உள்ளதால் வருத்தமடைந்த ரசிகர்கள் இதன் இரண்டாம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், மத்தகம் வெப் தொடரின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரின் முதல் பாகத்தை கண்டு ரசித்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்தையும் பார்க்க செம ஆவலாக உள்ளனர்.