மதுரையில் உருவாகும் எய்ம்ஸ் (Madurai AIIMS 2026) மருத்துவமனையை 2026 -ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.
மக்களவில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வி பின்வருமாறு :
மதுரையில் கட்ட அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை நியாயமற்ற வகையில் தாமதமாகிறது. இதில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
ஜெய்கா என்கிற ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிடம் இந்த மருத்துவமனை கட்ட கடன் பெறுவதற்கான தாமதம் ஏன்?
மதுரை உள்பட நாட்டில் மற்ற ஏன் மருத்துவமனைகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி இதில் இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?
இதற்கு மக்களவையில் அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் அறிக்கையில் கூறிருப்பதாவது :
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், சுற்றுச் சுவா் கட்டுவது போன்றவை முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மைக்கான ஆலோசகா் நியமிக்கப்பட்டு மாஸ்டா் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய சிவில் பணிக்கு தொழில்நுட்பம், நிதி மதிப்பீடு குத்தகைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பானிய யென் மதிப்பில் 22,788,000,000 கடன் ஒப்பந்தம் ஏற்பட்டது
(இந்திய மதிப்பில் முன்பு சுமாா் ரூ.1274 கோடியாக இருந்து பின்னா் ரூ.1,627 கோடியாக கடன் தொகை திருத்தியமைக்கப்பட்டது; மீதித் தொகை மத்திய அரசு வழங்குகிறது).
இதன்படி, இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வருகின்ற 2026- ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மதியை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை (Madurai AIIMS 2026) கட்டி தரப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்தியில் இருந்து அரசனை வெளியிடப்பட்டது.
Also Read : https://itamiltv.com/tomorrow-power-cut-in-chennai/
இதையடுத்து அங்கு ஒற்றை சங்களால் பூமி பூஜையும் போடப்பட்டது ஆனால் அந்த ஒற்றை செங்கலை தவிர இன்று வரை அங்கு வேற எந்த ஒரு கட்டுமான பணிகளும் நடத்த மாறி தெரியவில்லை.
இப்படி இதுற்கும் நிலையில் 2026 ஆக்டொபருக்குள் எய்ம்ஸ் மருத்துவனை கட்டி முடிக்கப்படும் என மக்களைவில்
மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாா் கூறிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.