Thirumalai nayak- திருமலை நாயக்கரின் 441வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரரும், ஆர் எம் ஆர் பாசறையின் நிறுவனருமான டாக்டர் பா. ராம் மோகன் ராவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்டடக் கலையில் மதுரையை சிறந்த நகராக்கிய பெருமை மன்னர் திருமலை நாயக்கரையே சாரும். இன்று அவரது 441வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த 2016 ஆண்டு முதல் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும், 1584ம் ஆண்டு தைப்பூச நாளில் திருமலை நாயக்கர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. எனவே, தைப்பூச திருநாளான இன்று திருமலை நாயக்கர் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:http://75th Republic Day-தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
அதன்படி, இன்று திருமலை நாயக்கர் மன்னரின் 441 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை முன்பு உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர்
மற்றும் பல்வேறு அமைப்பு மாலை சேர்ந்தவர்கள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஆர் எம் ஆர் பாசறையின் நிறுவனருமான டாக்டர் பா. ராம் மோகன் ராவ் IAS (R) அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், ராம் மோகன் ராவ் தலைமையில் முனிச்சாலை பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1750384908185612528?s=20
அப்போது, திருமலை நாயக்கர் மஹால் முன்பு உள்ள திருமலை நாயக்கரின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஆர் எம் ஆர் பாசறை நிறுவனமான டாக்டர் பா.ராம் மோகன் ராவ் IAS (R) அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து திருமலை நாயக்கரின் சிலைக்கு(thirumalai nayak) நிர்வாகிகள் சார்பில் மரியாதை செலுத்தினர்.
இதில் ஆர் எம் ஆர் பாசறை தென் மண்டல மற்றும் போடிநாயக்கனூர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.