ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அண்ணா பேருந்து நிலையம், பூங்கா முருகன் கோயில், தமுக்கம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இத்தனை அடுத்து நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் 700 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.