மும்பையில்(Mumbai) நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ளவும், 2024 லோக்சபா தேர்தலில் மத்தியில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் வெற்றிபெற கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அந்த வகையில், மும்பையில் இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்றும் நேற்றும் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா பானர்ஜி , உத்தவ் தாக்கரே, நித்திஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 26 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு தொடங்குவது, மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன்மூலம் தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்.
- இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறோம்.
- இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பல்வேறு மொழிகளில் ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பதெனத் தீர்மானிக்கிறோம்..
மேலும் இந்தியா கூட்டணி சார்பில் பொதுமக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பேரணிகள் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.