மகாராஷ்டிரா( maharashtra) மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தது.
அப்போது கட்டுமான பணியாளர்கள் பாலத்தை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் ஒன்று, சரிந்து இரும்பு பாலத்தின் மீது விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 16 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்கள் தெரிவித்துள்ளார்.
அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,
அதில், இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவதுடன் ,
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.