மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொன்று காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றாலும் சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் தாமதம் காட்டி வருகிறனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்குவதாக அறிவிப்புக்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 24ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ஃப்ரிட்ஜ், இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின், மூன்றாம் பரிசாக LED டிவி வழங்கப்படும் என்றும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு மிக்ஸர்-கிரைண்டர்கள் வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.