வீடு கட்டுபவர்களுக்கு `ஷாக்’ கொடுத்த கட்டுமான பொருட்களின் விலை..

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கட்டுமானப் பொருட்களான செங்கலின் விலை உயர வாய்ப்புள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் செங்கல் சூளைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டதால், செங்கலின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சூளை செங்கல் ஒன்று 8 ரூபாய்க்கும், சேம்பர் செங்கல் 10 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதுவும் ஸ்டாக் உள்ளே செங்கல்கள் மட்டுமே இந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். எனவே வரும் நாட்களில் மழை காரணமாக கட்டுமானப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டும்.

இது குறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்; செங்கல் தயாரிப்பது ஒரு நாளில் நடக்கக்கூடிய காரியம் கிடையாது என்கிறார்கள்.

பொதுவாக செங்கல் அறுத்து ஒரு வாரம் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர் ஒன்றாக அடுக்கி அதனை நன்றாக நெருப்பில் சூடேற்ற வேண்டும். பின்னர் அதனை பிரித்து எடுத்து பணிகளை முடிப்பதற்கு இரண்டு நாட்களாவது மழை பெய்யாமல் இருக்க வேண்டும்.

இப்படி மொத்தமாக பார்த்தால் ஒரு செங்கல் தயாரிக்க இரண்டு வாரங்கள் சுத்தமாக மழையே இல்லாமல் வெளியில் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நாள் மழை பெய்தாலும் பெரும் நஷ்டம் ஏற்படும்.

இதன் காரணமாகவே மழை காலத்தில் பெரும்பாலும் செங்கல் தயாரிப்பதை நிறுத்தி வைத்துவிடுவோம். ஒருவேளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டால் அது எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தி விடும் என்கிறார்கள். செங்கல்விலை உயர்வு மற்றும் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் கட்டுமான வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன..

Total
0
Shares
Related Posts