அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் தற்போது அமெரிக்க செயல்திறன் துறையில் எலன் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
Also Read : சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு பூஜை..!!
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றபின், செயல்திறன் துறையை (DOGE) தலைமை தாங்கி வழிநடத்த தொழிலதிபர் எலன் மஸ்க், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயல்திறன் துறை (DOGE) இன்னும் அதிகாரப்பூர்வ அரசாங்க நிறுவனமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இவர்கள் நியமனம் உட்கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் என நம்புவதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.