மோகன்லால் நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்து (Update) முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
கேரள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லாலின் அதிரடியான நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ .
மலையாளத் திரையுலகில் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி .
இவரது இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மோகன்லாலுடன் இப்படத்தில் மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .
பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் படக்குழு வெளியிட்டது .
மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு மோகன் லாலின் ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் அதையும் இப்போதே எடுத்து முடிக்க உள்ளதாகவும் படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் (Update) வெளியாகி உள்ளது.
Also Read : https://itamiltv.com/record-breaking-fighter-movie-trailer/
மலையாள சினிமாவில் கொடிகட்டி பறக்கும் மோகன்லால் அண்மையில் வெளியான சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் மோகன் லாலின் வெறித்தனமான நடிப்பில் உருவாகும் இப்படம் அவரின் வெற்றி படங்களின் பட்டியலில் இடம் பிடிக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.