பிரபல மலையாள திரைப்பட நடிகர் கைலாஷ்நாத் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் கைலாஷ்நாத். 65 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைலாஷ்நாத்துக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தொடர் சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் லில் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கல்லீரல் அலர்ஜி தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கல்லீரல் பாதிப்பு நோயால் தொடர்ந்து கைலாஷின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவரது மறைவு திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதிலும் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் தம்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாலைவன சோலை வள்ளி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.