தாய், மனைவி, 3 பிள்ளைகளை படுகொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியில் அனுராக் சிங் என்பவரது வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் என்ன ஏதென்று ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அடுத்தடுத்து பெண்ணின் அலறல் குரல் எழுந்ததுள்ளது. தொடர்ந்து வெறியோடு மாடிக்குச் சென்ற அனுராக்சிங், மொட்டை மாடியில் இருந்து தனது மூன்று குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக தூக்கி எறிந்திருக்கிறார்.
இதையும் படிங்க: தடையை மீறி தொடரும் ப்ளட் ஆர்ட்…. சமூக ஊடகத்தில் வைரலான ரீல்ஸ்!
இந்த பதைபதைக்கும் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க, சீதாப்பூர் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். சம்பவ இடத்தில் அன்ராக்சிங்கின் தாயார் துப்பாக்கியால் சுடப்பட்டும், அவரது மனைவி சம்மட்டியால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். பிள்ளைகளும் உயிரிழந்து கிடக்க, அனுராக் சிங்கும் தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் அவற்றை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் சீதாப்பூர் போலீஸ் எஸ்.பி. சக்ரேஷ் மிஸ்ரா கூறியதாவது;-
45வயதான அனுராக் சிங் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்துள்ளார். இதனால் மன ரீதியான பாதிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் வீட்டில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையில் தாய், மனைவி, 12,9,6 வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க; போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகைக் கொள்ளை… இது ரொம்ப தில்லுல!
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் 6 உயிர்கள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.