மகாராஷ்டிர மாநிலத்தில் சாமானியர் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்ததில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கார் ஒட்டி வந்த நபருக்கும், நிகில் குப்தா என்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கார் ஓட்டி வந்த முரளிதர் ராம்ராஜி நெவாரே என்ற நபரை போலீஸ் அறைந்ததில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நாக்பூரில் உள்ள மாதா கோவிலின் அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 30 வயதுடைய நிகில் குப்தா என்ற நபர் தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் அங்கு தனது காரை நிறுத்தியபோது, வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் அந்த பகுதியில் வசித்து வரும் 54 வயதாகும் முரளிதர் ராம்ராஜி நெவாரே என்பவரின் முகத்தில் பட்டுள்ளது.
ஹெட்லைட் வெளிச்சம் முகத்தில் படுகிறது. அதனை ஆஃப் செய்யுங்கள் என்று, நிகில் குப்தாவிடம், முரளிதர் ராம்ராஜி பணிவாக கூறியுள்ளார். ஆனால், கோபடைந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் நிகில் குப்தா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் முற்றியதில் முரளிதர் ராம்ராஜியை, நிகில் குப்தா பலமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், நிலைகுழைந்து தடுமாறி கீழே விழுந்த முரளிதரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர்.
ஆனால், முரளிதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டடார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நிகில் குப்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.