நீண்ட நேரம் தண்ணீரில் மிதந்த உருவம் -பொது மக்கள் கொடுத்த புகார்

Man-floating-in-water-for-a-long-time-public-complaint

குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தண்ணீரின் மேற்பரப்பில் நீண்ட நேரம் மிதந்த நபரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியைச் தங்கபாண்டி சேர்ந்த தங்கபாண்டி என்பவர் கொடைக்கானல் ஏரியின் நடுவில் நீண்டநேரமாக தண்ணீரில் மிதந்தபடி நீந்தியுள்ளார். நீண்டநேரமாக மிதந்தபடி இருந்துள்ள தங்கபாண்டியை பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏரியில் யாரோ ஒருவரது பிணம் மிதப்பதாக காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Man-floating-in-water-for-a-long-time-public-complaint
Man floating in water for a long time – public complaint

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகில் சென்று பார்த்தனர். அப்போது தங்கபாண்டி மிதந்து கொண்டு இருந்துள்ளார். இதை அடுத்து தீயணைப்புத் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தங்கபாண்டியை விசாரித்தபோது தான் ஒரு சிவனடியார் என்றும், தண்ணீரில் மிதந்தபடி ஆசனம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து தங்கபாண்டி தண்ணீரில் மிதந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Total
0
Shares
Related Posts