படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி

the-actor-was-admitted-to-powerstar-srinivasan-hospital

சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது திடீரென்று மயங்கி விழுந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்த இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

the-actor-was-admitted-to-powerstar-srinivasan-hospital
the actor was admitted to powerstar srinivasan hospital

இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்ததாகவும், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Total
0
Shares
Related Posts