மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிள் செலுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் யாதவ் என்ற நபருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் நாய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து சம்மந்தபட்ட செவிலியர் மற்றும் மருத்துவர் இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
தற்போது, ரேபிஸ் நாய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபரை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.