தமிழகம், புதுச்சேரியில் 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பந்தலூரில் 5 செ.மீ மழையும், சின்னக்கல்லார், இரணியல், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.