சென்னையில் ஒரு கோடி மோசடி – மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட பெண்.

Chennai-A-woman-has-been-arrested-for-allegedly-swindling-around-Rs-1-crore
Chennai A woman has been arrested for allegedly swindling around Rs 1 crore

அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாயை மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சேலையூரைச் சேர்ந்த பூபதி என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா என்பவரின் அறிமுகம் கிடைத்ததாகவும், தான் வழக்கறிஞர் என்பதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களை அந்த பெண் காட்டியதாக தெரிவித்துள்ளார்.


இதனால், மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாக கூறிய ஸ்டெபி, அதற்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பி தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், நீண்ட காலமாகியும் பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஸ்டெபி ஏமாற்றி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 நபர்களிடம் ஒரு கோடியே 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை வேலை வாங்கித் தருவதாக ஸ்டெபி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு கவல்துறையினர் ஸ்டெபியை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஸ்டெபியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து ஸ்டெபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Total
0
Shares
Related Posts