சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவடைகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதனைத் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் ஓமலூர், முருங்கமங்கலம், பெருநாடு சாஸ்தா கோயில் வழியாக தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், பத்தனம்திட்டா வழியாக சென்று நேற்று பம்பை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவடைகிறது.
காலை மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வருகை தந்தார்கள்.