மணிப்பூரில் வன்முறை காரணமாக அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு நாகா மற்றும் குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்புதெரிவித்து மணிப்பூரின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இந்த போராட்டத்தில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வன்முறை அமைதிக்கு வந்தது .ஆனால் தற்போது மீண்டும் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் கோவிந்தாஸின் வீட்டை வன்முறையாளர்கள் தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். மீண்டும்மணிபூரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.