குமரியின் கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தான் முக்கியக் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் .
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று குமரி மண்ணின் குளச்சலில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :
குமரி மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ரப்பர் பூங்கா ,தொழில் நுட்பப் பூங்கா என திமுக ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள்.
குமரியின் கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு அமைச்சர் மலைமுழுங்கி மனோ தங்கராஜ் முக்கியக் காரணம். உரிமம் இல்லாமல் குவாரிகள் இயங்குவது அமைச்சருக்குத் தெரியாதா.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக, பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே தேசியத்தின் பக்கம் நிற்கும் குமரி மண் முழு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.