கொள்கை இல்லாத கட்சிகள் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் , கொள்கை உள்ள கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
சென்னை வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது . நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது களத்தில் நின்று பணியாற்றினோம், ஆனால் இன்று குறை கூறுபவர்கள் யாரும் களத்தில் இல்லை.
சமக தலைவர் சரத்குமாருக்கு பாஜக-வுடன் இணையும் நோக்கம் உள்ளதால் தான் இந்த கருத்தை கூறி உள்ளார்.
ஆசியாவின் ஜோதி என்று உலக நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு, உலக சமாதானத்தை பற்றி பேசினார் . இந்த பாஜக அரசு உள்ளூர் சமாதானத்தை பற்றிக் கூட பேசவில்லை.
மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் ஒருவரால் எப்படி ஆசிய ஜோதி போன்ற பட்டத்தை பெற முடியும்.
கொள்கை இல்லாத கட்சிகள் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், கொள்கை உள்ள கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.