March 8 Gold Rate : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.ரூ..48,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க : 2024 March 8 : இன்றைய ராசி பலன்!!
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (07.03.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,105க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (07.03.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,989க்கும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,912க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,001க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து இன்று பந்த்!
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது (March 8 Gold Rate).