சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக உரிய விளக்கத்துடன் அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்திய விமான படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
பல வருடங்களுக்கு பின் சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றதால் விமான சாகசங்களைக் காண வந்த மக்களுக்காக தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய விமான படை பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருந்தது.
Also Read : “விமானப்படை சாகசம்” 5 பேர் சாவுக்கு அரசே பொறுப்பேற்க்க வேண்டும் – அன்புமணி காட்டம்..!!
இருப்பினும் வான் சாகச நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்றபோது கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு மாலை வரை சென்னையின் பல பகுதிகளில் வாகன நெரிசல் இருந்தது.
இந்நிலையில் வான் சாக நிகழ்ச்சியை பார்க்கவந்த மக்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இச்சம்பவம் தொடர்பாக உரிய விளக்கத்துடன் அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.