நெல்லையில் மக்கள் கூட்டம் நிறைந்த வாயிலில் மர்ம நபர்களால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது .
தலை உள்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுவாங்கிய அந்த இளைஞர் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் .
நீதிமன்ற வாசலில் மக்கள் கூட்டம் நிறைந்தும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் துணிச்சலாக இந்த கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திய 7 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் ஏறி மாயமானதாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .
நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் கண் முன்பே அரங்கேறும் கொடூர கொலைகளால் மக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் உள்ளனர்.