துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வரும் நாடக அமெரிக்காவின் தற்பொழுது சூழ்நிலைகள் இருந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளிகளில் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள் 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதனை அடுத்து நாடுமுழுவதும் கைத்துப்பாக்கியைத் தடை செய்யப் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,”இன்னும் எவ்வளவு படுகொலைகளைப் பார்க்கத் தயாராக இருக்க உள்ளோம் மீண்டும் என் நாட்டு மக்களைத் தோல்வியடையச் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் கைத்துப்பாக்கியான கடுமையான சட்டங்களை ஆதரிக்க மறுத்தது மனசாட்சியற்றது என தெரிவித்த அவர் ,ஆயுதங்கள் வாங்கக்கூடிய வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அதிக திறன் கொண்ட தோட்டாக்களைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் இது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும் என பைடன் தெரிவித்தார்.