சிக்கிம் (sikkim) மாநிலம் நாது லா மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனியின் கீழ் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
“பிற்பகல் 3 மணியளவில், 14 பேர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள ராணுவ மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், ஏழு பேர் உயிரிழந்தனர். மற்ற ஏழு பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது, என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 5-6 வாகனங்கள் மற்றும் 20-30 சுற்றுலாப் பயணிகள் நாது லாவுக்குச் செல்லும் வழியில் பனிக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
காங்டாக்கை நாது லாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில், மதியம் 12.15 மணியளவில் குறைந்தது 150 சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதியில் இருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டது.
நாது லா கணவாய், கடல் மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் (14,140 அடி) உயரத்தில், சீனாவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
நூற்றுக்கணக்கான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதையும், சிக்கியவர்களைத் தோண்டி எடுக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.
வடக்கு சிக்கிமில் (sikkim) ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் சிக்கி அதிகாரி ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும், இதுகுறித்த ஒரு வீடியோவில், பாதி புதைந்த நிலையில் ஒரு மனிதன், மீட்பதற்காகத் தோன்றியபடி, மண்வெட்டியைக் கொண்டு பனியை எடுப்பதைக் காணலாம்.
ராணுவம், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் காவல்துறையினரால் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.