Billa : ரீரிலீஸ் வெளியீடுகள் சமீப காலமாகத் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
கடந்த வாரம் ரீரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் மூவி கில்லி ரீரிலீஸ் பாக்ஸ் ஆபிஸில் ரூ 20 கோடியை வசூலித்தது,
இதைத் தொடர்ந்து ரீரிலீஸ் ட்ரெண்டில் அடுத்து அஜித் ரசிகர்களுக்கான மகிச்சியான தருணம்.
இதையும் படிங்க : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தற்கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம்!
நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1 கொண்டாடப் பட உள்ள நிலையில், அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பில்லா ரீரிலீஸ் செய்யப்படுகிறது.
முதலில் ரீரிலீஸ்க்கு மங்காத்தா முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பில்லா இப்போது தமிழ்நாடு முழுவதும் 150 முதல் 175 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுவர்தனின் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘பில்லா’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது.
இந்தத் திரைப்படம் ரஜினி நடித்த பில்லா படத்தில் ரீமேக் ஆகும் ரீமேக் படம் என்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்றுவரை ராசிகளில் கொண்டாடப்படுகிறது.
‘பில்லா’ திரைப்படம் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான வெற்றியாகவே அமைந்தது.
இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
நீரவ் ஷாவின் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இந்தப் படம் வழங்கியது.
மே 1 அன்று தமிழ்நாடு முழுவதும் மூலம் 150 திரைகளில் அரவிந்த் சுரேஷ் குமார் மற்றும் டாக்டர் ஞானபாரதி ஆகியோர் ஜிபி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
‘பில்லா’ படத்தை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பில்லா (Billa) ரீரிலீஸ் விஜய்யின் கில்லி மரீரிலீஸ் சாதனைகளை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க : கென்யாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 38 பேர் பலி!