சீனாவைப்போல் இருளில் மூழ்கிறதா இந்தியா? – நிலக்கரி பற்றாக்குறையால் அபாயம்..!

நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களிலிருந்தே கிடைக்கிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையம்

நாடு முழுவதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இல்லாமல், மின் உற்பத்தியை குறைத்துள்ளது.இதனால் தமிழ்நாடு, கர்நாடகா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மின் தடையை சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 4 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெய்த மழையின் காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி இல்லாத நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றாலும் கடந்த சில வாரங்களில் நிலக்கரியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உலகம் முழுவதுமே நிலக்கரியின் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளதால் தான்.

கொரோனா காலகட்டத்தில் மின்தேவை குறைந்து பல அனல் மின் ஆலைகள் உற்பத்தியை குறைத்திருந்தன. ஆனால், இப்போது கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், உலகம் முழுவதுமே மின் தேவை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Total
0
Shares
Related Posts