பாஜக வின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் திரௌபதி முர்மு, ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரை சேர்ந்த இவர், பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில்;
காங்கிரஸ் கட்சி யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பது குறித்து தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரால் நடத்தப்பட்ட எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கும் தன்னை அழைக்கவில்லை. சாதிய கண்ணோட்டத்தில் எதிர்கட்சிகள் தனது கட்சியை பார்க்கிறது. மேலும், பாஜகவை ஆதரித்தோ எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என மாயாவதி தெரிவித்துள்ளார்.