mdmk-DMK Alliance-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“கடந்த முறையை போல இல்லாமல் இந்த முறை கூடுதலாக 1 மக்களவை தொகுதி வேண்டும்” எனவும், “அந்த 2 தொகுதிகளோடு போன தடவையைப் போல தனக்கு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்” எனவும் திமுகவுடன் கோரிக்கை வைத்திருந்தார் வைகோ. ஆனால், திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாததாலேயே இதுவரை நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தைகளிலுமே எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் கமல்ஹாசன்..! கூட்டணி இன்று முடிவாகுமா..?
இந்நிலையில்தான் இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள அதன் தலைமையகமான தாயகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர் வைகோ உள்ளிட்ட மதிமுக தலைவர்கள் .
மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் திமுகவின் மற்றும் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவு இன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதிமுக தீர்க்கமான சில முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் கமல்ஹாசன்..! கூட்டணி இன்று முடிவாகுமா..?
அதன்படி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரிப்பது,(mdmk-DMK Alliance) கூட்டணி மற்றும் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு திமுக உறுதியளித்தபடி 2 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்வது என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, திமுக – மதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டு, இன்று மாலைக்குள் அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.