பள்ளி மாணவியையாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். சிறுமி அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால், சிறுமியின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் அந்த தகவலை தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து மருத்துவமனை சென்ற தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அதில்,பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் வேலை செய்து வரும் ஆண்ரோ என்ற 20 வயது இளைஞர் பள்ளிக்கு செல்லும் போது அந்த சிறுமிடம் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறிய நிலையில் இருவரும் பல மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.
இதற்கிடையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு, சிறுமியை தனது பைக்கில் அழைத்து கொண்டு சென்னை புறநகர் பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஆண்ரோவை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.