சிம்பு பிறந்தநாளை ஒட்டி, நேற்று ஒரே நாளில் வெளியான 3 சிறப்பான தரமான அறிவிப்புகள் அவரின் ரசிகர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் , ATMAN என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் நடிகர் சிலம்பரசன் . இவரது நடிப்பில் தற்போது பல மெகா பட்ஜெட் படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு நேற்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது அடுத்ததடுத்த திரைப்படங்கள் குறித்து 3 சிறப்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது .
அதன்படி சிம்புவின் 49வது படமாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் கல்லூரி மாணவன், சொந்த தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் 50வது படத்தில் ‘அரசன் ‘, அஷ்வந்த் மாரிமுத்து இயக்கும் 51 படத்தில் ‘காதல் கடவுள்’ என பல அவதாரங்களில் சிம்பு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .