Minister Geetha Jeevan | மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறும் அண்ணாமலை.. நிதியே வழங்காத மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பாதது ஏன் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான தேர்தல் பணிகளை திமுக ,பாஜக ,காங்கிரஸ் ,அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக ஈடுபத்துய வருகிறது.
அந்த வகையில், திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ளபட்டு வருகிறது.
அந்த வகையில்,தூத்துக்குடி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டம்
இதையும் படிங்க: தவித்த மக்களை பற்றி கவலைபடாத நிதியமைச்சர்…கோவில் புரோகிதரின் சம்பளம்..-கனிமொழி!
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், வரும் 25ம்தேதி மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார்.
அப்போது பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758796150315073941?s=20
ஆனால் பிஜேபி தலைவர் அண்ணாமலை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி காணாது. கூடுதலாக பத்தாயிரம் வழங்க வேண்டும் என அவர் கூறி வருகிறார்.
ஆனால் தமிழகம் மழையினால் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை.
இதுகுறித்து முதல்வர் கடிதம் எழுதியும் இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை.
ஆனால் தமிழக அரசு சாலை, உடைந்த பாலம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி என அனைத்தையும் வழங்கி வருவதாக(Minister Geetha Jeevan) அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.