2025 ஆண்டிற்குள் காசநோய் (TB) இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், வட தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மழை பாதிப்பால் ஏற்படும் காய்சல்கள் எதுவும் இல்லை என ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழ்நாடு காசநோய் ஒழிப்பு திட்டம், ரூ.27.96 கோடி மதிப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் CSR நிதியிலிருந்து காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..,
2025 ஆண்டிற்குள் காசநோய் (TB) இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்றார்.
மேலும், மொபைல் எக்ஸ்ரே டைக்னஸ்டிக் வேன் மிக பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது.
காசநோயை துள்ளியமாக கண்டரியும் கருவி மூலம் 4 லட்சம் பேருக்கு சளி மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டுள்ளது.
காச நோய் இல்லா எனும் இலக்கு வெற்றியை நோக்கி சென்று வருகிறது.
IOCL நிறுவனம் – 27.96 கோடி மதிப்பீட்டில் சி எஸ் ஆர் நிதியிலிருந்து காச நோய் மூலகூறு கண்டறியும் கருவிகள் வழங்குவதற்குகான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/pongal-festival-3000-to-provide-rs-emphasis-ops-insist-action-should-be-taken-to-provide-pongal-package-immediately/
தற்போது, 272 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த கருவி பயன்பாட்டில் உள்ளது என்றார்.
வலி நிவாரணி மாத்திரைகளை தடுக்க முடியாது – இதனை தவறான முறையில் பயன்படுதத்துபவர்கள் ஒரு சிலர் உள்ளனர். அவர்களாகவே பார்த்து திருந்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் போதை விற்பனை புகாரின் பேரில் மூடபட்டு உள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களைத் தொடர்ந்து பேசிய செயலாளர் ககன்தீப்சிங் பேடி..
வட சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகள் அதிக விற்பனையாகும் மருதககங்கள் கண்கணிக்கபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் போதை பொருள் விற்பனை புகாரின் பேரில் மூடபட்டு உள்ளது இது தொடர்பான விரிவான அறிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
7,892 முகாம்கள் மழை பாதித்த 4 மாவட்டங்களில் நடைபெற்று உள்ளது. அதில், 24,13,351 பேர் பயன் பெற்று உள்ளனர் என்று தெரிவித்தார்.
வட தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மழை பாதிப்பால் ஏற்படும் காய்சல்கள் எதுவும் இல்லை என கூறினார்.