விழுப்புரத்தில் குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்(masthan) ஊஞ்சல் விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் நகராட்சி கலைஞர் நகர் பிறமேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023 மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் திண்டிவனங்களில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இந்த நிலையில்,இந்த பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்(masthan) கலந்து கொண்டு பூங்காவைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைவர் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பூங்காவைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஊஞ்சல் ஆடினார் . இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.
முன்னதாக மச்சான் செந்தில் மஸ்தான் பற்றி சில நாட்களாகச் சர்ச்சைகள் வலம் கொண்டிருக்கிறது. அதிலும் கள்ளச்சாரை விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.