Minister Sekarbabu-அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதைப் போல ஆளுநருக்கு யாரைப் பார்த்தாலும் அப்படித் தோன்றுகிறது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கோட்டபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா சம்ப்ரோஷன பெருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதனை அடுத்து இக்கோவிலுக்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்…
ராமர் திருக்கோவில் பூஜை நடைபெற்று வரும் வேளையில் தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் எந்தவித பூஜைக்கும் தடை விதிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோதண்டராமன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருமலை மற்றும் முள்ளங்குடி அருள்மிகு கோதண்டராமன் திருக்கோவிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்த ஆட்சியில் தான் அதிகமான குடமுழுக்கு திருவிழா நடைபெறக்கூடிய ஆட்சி நமது முதலமைச்சர் ஆட்சி. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
அனைத்து திருக்கோவில்களிலும் அனைத்து பக்தர்கள் தங்கள் விரும்பக்கூடிய பக்தி பாடல்களை பாடவும் எந்த விதமான தடை அளிக்கவில்லை என தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறோம்.
இதையும் படிங்க :http://ராமர் கோயில் திறப்பு விழா: இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்”-மோடி!
ஆளுநர் வருகையின் போது அவருக்கு திருக்கோயில் சிவப்பு கம்பளம் விரித்து சிறந்த முறையில் தரிசனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியை பொருத்தவரையில் யாருக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது. அவர் அச்சத்தில் இருந்தால் அவர் பக்கத்தில் அமர்வாரா ஆளுநர்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல ஆளுநர் யாரைப் பார்த்தாலும் அப்படி தோன்றுகிறது போல இருக்கிறது.
அந்த திருக்கோயிலின் பட்டாட்சியர் மோகன் தங்கள் எந்த விதமான அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை எனவும் தங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக தங்களது ஆட்சி நடைபெறுவதாக சித்தரிக்கும் முயற்சி செய்கிறார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749382914251620641?s=20
ராமர் பஜனைக்கு திருக்கோயிலில் நடத்துவதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அனுமதி அளித்துள்ளது.
நாங்கள் தடை விதிக்கவில்லை என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள கோவிலில்,
எல் இ டி திரை அமைக்கப்பட்டு பக்தர்கள் அயோத்தியில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை கண்டு களித்து வருகிறார்கள்.
அந்த திருக்கோவிலுக்கு கூட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் வருவதாக கூறினார்கள் நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.
இந்து சமய அறநிலை பொறுத்தவரையில் வரையில் திருக்கோவிலுக்குள் எல் இ டி திரை அமைப்பது அன்னதானம் வழங்குவது என எந்த தடையும் விதிக்கவில்லை.
ஆனால் அதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது.நாங்கள் ஆன்மீகத்துக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை.
ஆனால் ஆன்மீகத்துடன் அரசியலை சேர்த்து நடத்தும் பொழுது தான் அதற்கான தடையை இந்து சமய அறநிலைத்துறை விதிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
என்றுஅமைச்சர் சேகர்பாபு (Minister Sekarbabu)தெரிவித்தார்.