அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது . இதையடுத்து தற்போது புழல் சிறையில் உள்ள முதல் வகுப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.