அம்மா மாரியம்மா.. அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுங்கள் என்று கரூர் மாநகராட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் தலையில் மொட்டை அடித்துக் கொண்டு அங்கபிரதட்ஷணம் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil balaji) அமலாக்கத்துறை 17 மணிநேர சோதனையைடுத்து கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற உத்தரவின் பெயரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil balaji) காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது .இதனையடுத்து அடுத்த கட்ட சிகிச்சை செய்யப்படும் எனக் காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண உடல்நலம் பெற வேண்டி கரூர் தேர் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகர மாநகராட்சி தலைவர் சக்திவேல் உட்பட உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளுக்கும் முடிக் காணிக்கை செலுத்தினர் .
மேலும் கோவில் வளாகத்தைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் மேற்கொண்ட அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி பிராத்தனையில் ஈடுபட்டனர்.