இந்திய ஊழியர்களுக்கு ஆறு சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்குவதற்காக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (senthilbalaji), மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி (senthilbalaji) தலைமையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின்வாரிய செயலாளர் ஆ மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…
மின்வாரிய பணியாளர்களுக்கு 01.12.2019 அன்று பெறுகின்ற ஊதியத்தில் ஆறு சதவீதம் ஊதிய உயர்வு நிர்வாகத்தின் சார்பிலும், தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, 01.12.2019 ஆம் நாள் அன்று 10 வருடங்கள் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிபலனாக 01.12.2019 ஆம் அன்று மூன்று சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் மாநில அரசுக்கு கிட்டத்தட்ட 527 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அனைத்து தொழிற் சங்கத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உன்னதமான ஊதிய உயர்வினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாரிய தொழிலாளர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.