Eps Vs Thangam Thennarasu | தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை விடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ‘கடன்’ என்ற சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு.
ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை.
‘ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது.
அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது’ என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.
ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: TN budget-2024 | மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை..- வானதி!
ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?
2014-இல் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி அவர்களின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்?
பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்கள், அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1759808314979103036?s=20
பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது’’ எனச் சொல்லியிருக்கிறார்.
அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.
கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.
’தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது’ எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள்.
கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் மறந்துவிட
வேண்டாம்(Eps Vs Thangam Thennarasu) அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.