அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 500 குடும்பங்களுக்கு அரிசி – பால் – போர்வை உள்ளிட்ட மழைக்கால நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்கள்.
கடந்த திங்கட்கிழமை கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மிக்ஜாம் புயல் கடந்து சென்ற போது பெய்த அதிகனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கியதால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புயல் காரணமாக 4 மாவட்டங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், தண்ணீர் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் சீரடைந்து வருகிறது. தற்போதுவரை 80 சதவீத இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்புமிகு அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மேற்கு மாவட்டக்கழகம் சார்பில், அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி – வட்டம் 105, வத்தலகுண்டு தெரு பகுதியில் வசிக்கின்ற 500 குடும்பங்களுக்கு அரிசி – பால் – போர்வை உள்ளிட்ட மழைக்கால நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்கள்.