நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் (KIYG) வருகிற ஜனவரி 19 முதல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04.12.23) கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்துகொள்ளும் போட்டி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியாகும். அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் (KIYG) கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த போட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,
கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதையும் படிங்க : https://itamiltv.com/i-request-the-tnpsc-management-and-tamilnadu-government-to-postpone-the-written-test-for-integrated-engineering-posts-ttv/
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக சென்னையில் நடத்தப்பட உள்ளது.
பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.

மேலும், இதில் கலந்துகொள்ளும் வீரர் / வீராங்கணைகள் ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ்,
பள்ளி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே, அதற்காக அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/meenakshi-govt-college-protest-on-behalf-of-tamil-nadu-government-college-teachers-association-tamil-news/
இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து அதற்கான அழைப்பிதழை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.