செஞ்சி மஸ்தான் சகோதரரைச் செஞ்சி பேரூராட்சி செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புர வடக்கு மாவட்ட செயலாளராகவும் ,சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான்(Senji Masthan) .
சட்டமன்றத்தில் முதன் முறையாகச் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை உருவாக்கபட்ட போது அதில் போட்டியிட்டு செஞ்சி தொகுதியில் வெற்றி பெற்று மஸ்தான்(Senji Masthan) தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து செஞ்சி மஸ்தான்(Senji Masthan) பேரூராட்சி தலைவராக அவரது மகன் முத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மேலும் கட்சி ரீதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளாக உள்ளார்.மேலும் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளாக உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் மஸ்தான் சகோதரர் காஜா நஜீர் கடந்த15 ஆண்டுகளாகச் செஞ்சி பேரூர் கழக செயலாளராகத் செயல்பட்டு வந்தார். கடந்த 13 ஆம் தேதி மரக்காணம் அடுத்த ஏகஆர் குப்பத்தில் விஷசாராயம் குடித்து 13 உயிரிழந்தனர்.
அந்த சம்பவத்தில் திண்டிவனம் நகராட்சி 20வது திமுக வார்டு பெண் நகர்மன்ற உறுப்பினராக உள்ள ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா மற்றும் பிரபல சாராய வியாபாரி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மருவூர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் குடும்ப உறுபினர்கள் திமுக கட்சியில் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனால் தவறான நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் கட்சி தலைமைக்குச் சென்றது.
இந்த நிலையில் மஸ்தானின் தம்பி காஜா நசீர் பதவில் இருந்து நீக்கபட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.