டெல்லி புராரி பகுதியில் வசித்து வந்த 68 வயது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் (crime) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
68 வயதான அந்த முதியவர் தனது 40 வயது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாந்தீரக செயல்களில் ஈடுபாடு அதிகம். இந்நிலையில், முதியவரின் வீட்டின் அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், அந்த வீட்டில் 16 வயது சிறுமி ஒருவரும் இருந்துள்ளார்.
அந்த வீட்டிற்குள் தனது மாந்திரீக செயல்களை செய்வது போன்று முதியவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இப்படி, அடிக்கடி சென்று வந்ததன் மூலம் 16 வயது சிறுமி தனியாக இருக்கும் போது இந்த முதியவர் அத்துமீறி சென்று பாலியல் வன்கொடுமையில் (crime) ஈடுபட்டு வந்துள்ளார்.
தினமும் இப்படி சிறுமியை தனியே அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், இதை வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், அந்த 68 வயது முதியவருக்கும் அவரது மகனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், தனது தந்தையின் நடவடிக்கையின் மீது மகனுக்கு சந்தேகம் வந்த நிலையில், தந்தைக்கு தெரியாமல் தனது செல்போனை ரகசியமாக வைத்து கண்காணித்ததில், சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அந்த வீடியோவின் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர், தனது தந்தை மீது இருந்த வெறுப்பின் காரணமாக இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் காட்டியுள்ளார்.
அதனைப் பார்த்து அதிர்ந்து போன சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளிக்கவே, காவல் துறையினர் 68 வயது முதியவர் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முதியவரின் குற்றங்கள் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து, 68 வயது முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், காவல்துறை நீதிமன்ற காவலில் எடுத்து அவரிடம் விசாரித்து வருகிறது.
மேலும், வீடியோவை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மகனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.