லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 லோக்சபா தேர்தலின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பி.எம். சயீத்தின் மருமகன் பதநாத் சாலியைக் கொலை செய்ய முயன்றதற்காக பைசல் மற்றும் நான்கு பேர் மீது கவரத்தி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கேரள உயர்நீதி மன்றம் கொலை முயற்சி வழக்கில் ஃபெசல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து பைசலுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ,நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தடை உத்தரவு பிரபித்து இருந்தது.இதனையடுத்து உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது.
இந்த வழக்கின் விசாரணை எம்.பி. நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது பைசல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை காலி செய்வது வாக்காளர்களின் உரிமையை மீறும் செயலாகும் என்றும் ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பைசல் எம்பியாக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.பைசல் மீதான அணுகுமுறை ஒரு சாதாரண குற்றம் சாட்டப்பட்டவரைப் போல் இல்லை என்று சுட்டிக்காட்டியது. இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.