நிலாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என்று இந்து மகாசபா தலைவர் சக்ரபாணி மகராஜ் பேசியுள்ளது சமூக வலைதளைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராச்சி நிலையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.இந்த சம்பவம்உலக நாடுகள் கவனத்திற் தன பக்கம் ஈர்த்தது.இது இந்தியாவிற்கு பெருமையான தருணம் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்க்கு பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு ,இந்து மகாசபா தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் வரவேற்பு தெரிவித்து கோரிக்கை ஒன்றும் வைத்துள்ளார். நிலவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்பொழுது இந்துமகா சபை தலைவர் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.